இணையத்தில் பணம்

உங்களிடம் நல்ல இணைய இணைப்பு உள்ளதா?? வேலையும் முடிஞ்சுது. வலைப்பதிவிலையும் எழுதியாச்சு, மற்ற வலைப்பதிவுகளையும் ஒரு சுத்து சுத்தி பாத்தாச்சு. இனியும் நேரம் இருக்கா. வாங்க கொஞ்சம் உழைக்கலாம்.
உங்களுக்கு கணினியில என்ன செய்யத்தெரியும்?? தகவல் உள்ளீடு?? கணினி வரைகலை?? இணைய வடிவமைப்பு?? மொழிபெயர்ப்பு?? பிளாஸ் வடிவமைப்பு?? எல்லா விதமான வேலைகளும் இங்க இருக்கு. கீழ இருக்கிற படத்தின் மேல சொடுக்கி ஒரு கணக்கு ஒன்றை உருவாக்கி கொள்ளுங்க. பிறகென்ன அங்க வரிசைப்படுத்தி இருக்கிற ஆயிரக்கணக்கான வேலைகளை வென்று பணம் பணம் பண்ண தொடங்குங்க.

http://www.getafreelancer.com/

பணம்



பணம் என்றால் என்ன?

நமது உழைப்பை இன்னொருவருக்கு பலனளிக்கும்படி கொடுத்து அதற்கு பதிலாக அவரது உழைப்பை நமக்கு பலனளிக்கும்படி வாங்கிக் கொள்வதற்கான இடைப் பொருள்தான் பணம்.


எனக்கு முடி வெட்டிக் கொள்ள வேண்டும், அதை செய்யும் கலைஞரின் உழைப்புக்கு மாறாக நான் அவருக்கு எனது உழைப்பை வழங்க வேண்டும். என்ன செய்யலாம்?


அவரது கடைக்கு நல்ல விளம்பரமாக அமையும்படி ஒரு வாசகத்தை உருவாக்கி, கணினியில் உள்ளிட்டு அழகாக அச்சடித்துக் கொடுக்கலாம். அதை கடைக்கு முன்பு கட்டிக் கொண்டால் இன்னும் பலர் கடைக்கு வருவதால் அவரது வருமானம் அதிகமாகலாம்.


இந்த முறைக்குப் பெயர் பண்ட மாற்று.


எனக்குத் தேவையான சேவை அல்லது பொருளைத் தேடிப் போகும் போது அதை கொடுக்க கூடியவரைக் கண்டு கொண்டால் மட்டும் போதாது. அவரது பணிக்கு மாறாக அவருக்குத் தேவையானதைக் கொடுக்க என்னிடம் ஏதாவது இருக்க வேண்டும். ஏற்கனவே கடையில் நல்ல விளம்பரப் பலகைகள் இருந்தால் எனது கணினித் திறனின் சேவை அவருக்குத் தேவைப்படாமல் போய் விடும்.


இரண்டாவதாக, 'ஒரு முடி வெட்டுக்கு இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா' என்று நான் நினைக்கலாம். 'ஒரு முடி வெட்டுக்கு நான்கு தட்டிகள் தர வேண்டும்' என்று கடைக்காரர் சொல்லலாம். இப்படி பேரம் பேசுவதும் சிக்கலாகிப் போய் விடும். 'இதே போன்ற தட்டியை போன வாரம் ஒரு பெரிய உணவு விடுதிக்குச் செய்து கொடுத்து மாற்றாக அவர்களது விடுதி அறையில் நான்கு நாட்கள் தங்கும் வசதியைப் பெற்றதுடன்' ஒப்பிட்டால் இந்த முடி வெட்டுக்கு ஒரு தட்டி என்பது நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம்.


பண்ட மாற்று முறை மட்டும் இருந்தால் இது போல பொருளின், சேவையின் மதிப்பு வாங்குபவர்களின் தேவை, விற்பவரின் விலை மட்டும் சார்ந்திராமல், மாற்றுப் பொருளுக்கான விலை, செலவு என்று நான்கு விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.


இப்படித்தான் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் பொருட்களை, சேவைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது உணர்ந்திருப்பார்கள்.


வலுவான ரூபாயின் விளைவுகள்


டாலரின் மதிப்பு குறைந்ததால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?


௧.நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் விற்பனை குறையும்.

ஒரு பொருள் செய்ய 100 ரூபாய் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம் டாலருக்கு 45 ரூபாய் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த பொருளை லாபமும் சேர்த்து 2.5 டாலருக்கு விற்றால், ஏற்றுமதியாளருக்குக் கையில் 112.50 ரூபாய்கள் கிடைக்கும். 12.50 ரூபாய்கள் லாபம்.


இப்போது அதே பொருளை 2.5 டாலருக்கு விற்றால் (1 டாலர் 39.50) 99.50 காசுகள்தான் கிடைக்கும். 50 காசுகள் இழப்பு.


இதைச் சரிகட்ட செலவுக் கணக்கைக் குறைக்கப் பார்க்கலாம் அல்லது விற்பனை விலையை ஏற்றப் பார்க்கலாம். வாடிக்கையாளர் விலையை 2.70 ஆக ஏற்ற ஒப்புக் கொண்டால் அதே பொருளை விற்று 106.60 ரூபாய்கள் கிடைக்கும். கூடவே உள்ளிடு பொருட்கள் வாங்கும் போது விலை குறைக்கச் சொல்லி கேட்கலாம். தேவையில்லாத செலவுகளைக் குறைக்கலாம், முதலீடுகளைத் தள்ளிப் போடலாம். பழையபடி 12.50 ரூபாய்கள் லாபம் நிற்கும் படி முயற்சிப்பார்கள்.


௨.வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்கள் மலிவாகக் கிடைக்க ஆரம்பிக்கும்.எரிஎண்ணையின் விலை பேரலுக்கு 70 டாலர்கள் என்றால் அதன் விலை முன்பு 70*45=3150 ரூபாய்களாக இருக்கும். இன்றைக்கு அதே விலை எண்ணெய் வாங்க 70*39.5= 2765 ரூபாய்கள் செலவழித்தால் போதும்.


இது இரண்டு வகையில் போகலாம். திறமையான மக்களாக இருந்தால் இப்படிக் கிடைத்த தமது நாணயத்தின் வலிமையைப் பயன்படுத்து வெளி நாடுகளிலிருந்து மூலப் பொருட்களை வாங்கி தமது உற்பத்தியைப் பெருக்கிக் கொள்வார்கள் அல்லது முதலீட்டில் செலவிட்டு புதிய இயந்திரங்கள், வெளி நாட்டில் விற்பனை அலுவலகங்கள் என்று ஆரம்பித்து தமது உற்பத்தி வலிமையையும் சந்தைப்படுத்தும் திறனையும் அதிகப்படுத்திக் கொள்வார்கள்.


மாறாக, இறுதிப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தால் உள்ளூர் மக்களின் பாடு திண்டாட்டமாகிப் போகும்.


இந்தியாவில் அரிசி கிலோ 25 ரூபாய்க்கு விற்கிறது என்று வைத்துக் கொள்வோம். பழைய மதிப்பில் கிலோ 0.5 டாலருக்கு அமெரிக்காவின் அரிசி இங்கு வந்து சேர்ந்தால் அடக்க விலையே 22.50ல் ஆரம்பிக்கும் (45*0.5). இப்போது அதே அரிசியின் அடக்க விலை ரூபாய் 19.75 ஆக இருக்கும். மற்ற செலவுகள் போக கிலோவுக்கு 2 ரூபாய் லாபம் பார்க்கலாம் என்று ஒருவர் அமெரிக்க அரிசியை நம் ஊரில் விற்க ஆரம்பித்தால் விவசாயிகள் நிலைமை திண்டாட்டமாகிப் போய் விடும்.


௩.ரூபாய்களில் சம்பாதிப்பவர்களின் வளம் அதிகரிக்கும். இந்தியாவில் செயல்படும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு நல்ல ஆதாயம். புதிய கருவிகள் வாங்கும் செலவுகள், வெளிநாட்டு இணைப்புக்குக் கொடுக்கும் கட்டணம் எல்லாம் குறைந்து விடும். வருமானமோ குறையப் போவதில்லை.


இந்தியாவிலிருந்து துபாய்க்கு தொலைபேசி அழைப்புக்குக் கட்டணம் நிமிடத்துக்கு 4.50 ரூபாய்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 0.05 டாலர்கள் துபாய் நிறுவனத்துக்கு பிஎஸ்என்எல் கொடுக்க ஒப்பந்தம். முந்தை செலாவணி விகிதத்தில் ஒரு நிமிடத்துக்கு கொடுக்க வேண்டிய தொகை 2.25 ரூபாய்கள், மிஞ்சும் தொகை 2.25 ரூபாய்கள். இப்போதைய விகிதத்தில் கொடுக்க வேண்டிய தொகை அதே 0.05 டாலர்களுக்கு ரூபாய்களில் 1.95 காசுகள். ஒரு நிமிடத்துக்கு 30 காசுகள் லாபம்.


இது 2வதாக சொன்ன அதே இறக்குமதி ஆதாயம்தான். துபாய் நிறுவனத்தின் சேவையை இறக்குமதி செய்து கொடுக்கிறது இந்திய நிறுவனம். அதற்கான செலவு குறைவு.


இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு அழைக்கும் கட்டணங்கள் குறைக்கப் படலாம். எதிர்மறையாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை அழைக்கும் கட்டணங்கள் உயரலாம்.

4. வெளிநாடுகளில் சுற்றிப் பார்க்க, தொழில் தொடர்பாக, படிக்கப் போகும் இந்தியர்களுக்குச் செலவு குறைவு.ஆங்காங்கில் விற்பனை அலுவலகம் ஒன்றைத் திறந்து அந்த ஊர் ஊழியரை வேலைக்கு வைக்க ஆகும் மொத்த செலவு மாதத்துக்கு 5000 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். டாடா தேயிலை நிறுவனம் குறைந்த செலவில் அலுவலகத்தை ஆரம்பித்து நடத்தலாம். முன்பு 2.225 லட்ச ரூபாய்கள். இப்போது 1.95 லட்ச ரூபாய்கள்தான்.


இரண்டு ஆண்டுகள் மேலாண்மை படிப்புக்குச் செலவு 20000 டாலர்கள் என்றால் முன்பு 9 லட்சம் ரூபாய்கள் தேவைப்படும் இப்போது 7.9 லட்சத்தில் முடித்து விடலாம்.


நியூயார்க்கில் ஒரு இரவு தங்குவதற்கான விடுதிச் செலவு 80 டாலர்கள் என்றால், இப்போதைய செலாவணி விகிதத்தில் 420 ரூபாய்கள் குறைவான செலவு.


5. வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பும் போது கிடைக்கும் மதிப்பு குறைந்து விடும். 1000 டாலர்கள் சேமிப்பு முன்பெல்லாம் 45 ஆயிரங்களாக மாறிக் கொண்டிருந்தது, இப்போது 39 ஆயிரங்கள்தான் கிடைக்கும்.


என்னென்ன செய்யலாம்?
முதலீடுகளை டாலர்களில் செய்யலாம். வேலை பார்க்கும் நாட்டிலோ, டாலர்களில் செலாவணி நடக்கும் நாடுகளிலோ சொத்துக்களை வாங்கிப் போடலாம்.இந்தியாவில் முதலீட்டுக்காக வாங்கி வைத்திருந்த சொத்துக்களை விற்று டாலராக மாற்றிக் கொண்டால் லாபம் கிடைக்கும்.ஒரு ஆண்டு முன்பு 20 லட்சம் ரூபாய்களுக்கு ஒரு வீடு வாங்கும் போது அதற்காக 45,000 டாலர்களை மாற்றிச் செலவழித்திருக்க வேண்டும். இப்போது அதே வீட்டை அதே விலைக்கு விற்று டாலராக மாற்றினால் 50,000 டாலர்களுக்கு மேல் கிடைக்கும். நிகர லாபம் 11%. வீட்டு விலைகள் தாறுமாறாக ஏறியிருக்கும் நிலையில் அதே வீட்டுக்கு 40 - 45 லட்சங்கள் கிடைத்தால் அதை டாலராக மாற்றி வேலை பார்க்கும் நாட்டில் முதலீடு செய்யலாம்.
ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்மென்பொருள், துணி, ஆடைகள், தோல் போன்ற துறை நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தலுக்குத் தயாராக வேண்டும். முன்பு போன்ற ஊதிய உயர்வுகள், புதிய வேலையில் தாவும் வாய்ப்புகள் இருக்காது.தொலை தூர நிறுவனச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு நெருக்கடி அதிகமாக இருக்கும். பல மாறுதல்களைப் பார்க்கலாம்.

நாணய மாற்று வீதமும் ஏற்றுமதியும்
டாலரின் மதிப்பு 4 ரூபாய் வரை குறைந்ததால் ஏற்றுமதித் துறையில் பணப் புழக்கம் நெரிந்துள்ளது. மாதம் 10,000,000 டாலர் (நாலரைக் கோடி ரூபாய்) ஏற்றுமதி செய்து கொண்டுருக்கும் ஒரு நிறுவனத்தில் மாதத்துக்கு 40 லட்சம் ரூபாய் பண வரத்து குறைந்து விடும். பல இடங்களில் செலவைக் குறைப்பார்கள்.இந்த நெரிசலில் பல நிறுவனங்கள் நொடித்துப் போக வாய்ப்பு இருக்கிறது. என்னதான் நல்ல பொருள்/சேவை வழங்கினாலும், எதிர்கால சாத்தியங்கள் இருந்தாலும் நிகழ்காலத்தில் பணப் புழக்கம் நின்று போனால் உயிர் நின்று விடும். உடலில் ரத்த ஓட்டம் போல அது. வர வேண்டிய பணம் என்று எவ்வளவு இருந்தாலும் கையில் இருக்கும் பணமாக மாறாத வரை பலனில்லை.பெரிய நிறுவனங்கள் இந்த மாற்று வீதக் குறைவிலிருந்து தப்பிக்க ஏற்பாடுகள் செய்திருந்ததால் இப்போதைய விளைவுகளைத் தவிர்த்தாலும். அடுத்த பருவத்துக்கான கணக்கிடுதலில் உதைக்கப் போகிறது.உற்பத்தித் துறையைப் பொறுத்த வரை வலுவான ரூபாய் ஆறு மாத நோக்கில் ஏற்றுமதி திறனை அதிகரிக்கத்தான் செய்யும்.
இறக்குமதி இடுபொருட்களின் விலை குறைதல்,
பொதுவான உள்நாட்டு விலை வாசி குறைதல்,
வாடிக்கையாளரிடம் விலை மாற்றம் கோருதல்என்று நான்கைந்து மாதங்களில் திறமையான தொழில் முனைவோர், முன்பை விட வலிமையாகி விடுவார்கள். இடைப்பட்ட மாதங்களில் பல்லைக் கடித்துக் கொண்டு இடுப்புப் பட்டையை இறுக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.1990களில் ரூபாயின் மதிப்பு குறையும் போது ஒவ்வொரு முறையும் இது ஏற்றுமதி வணிகத்துக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டாலும். அந்தத் தாக்கம் சில மாதங்களிலேயே சமன் படுத்தப்பட்டு ஏற்றுமதி வியாபாரமும் தத்தளிக்கத்தான் செய்தது. மலிவான விலை என்ற ஒரே வலிமையில் செய்யும் தொழில்கள் மறைந்தாலும், ஒட்டு மொத்தமான திறமையுடன் செயல்படும் உற்பத்தித் தொழில்கள் வளப்பட வலிமையான நாணயம் உதவுகிறது என்றே படுகிறது.

பங்கு சந்தை விளையாட்டு

பணம் எதுவும் முதலீடு செய்யாமல் பங்கு சந்தையில் விளையாட வேண்டும் என்ற ஆசையிருந்தால், உங்களுக்கு ஒரு நற்செய்தி!அமெரிக்காவின் Marketwatch.com நடத்தும் Virtual Stock Exchange தளத்தில் இலவசமாக பங்கு சந்தை விளையாட்டை விளையாடலாம். அமெரிக்க பங்கு சந்தையில் உள்ள பங்குகளை மட்டுமே இந்த விளையாட்டில் நீங்கள் வாங்கி விற்கலாம்.காசா பணமா, சும்மா விளையாடுங்கள்… பங்கு சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு இந்த தளம் மிக உபயோகமாக இருக்கும். நீங்கள் உலகத்தில் எங்கு வசித்தாலும் இந்த விளையாட்டு ஒரு நல்ல அனுபவம்.
இந்த உலகத்தில் நாம் உயிர்வாழ, அக்க்ஜிஷனுக்கு அடுத்தபடியாக முக்கியமாகத் தேவைப்படுவது பணம்.

சர்வ வசதிகளும் நிறைந்த இவ் உலகத்தில் நாம் பணம் சம்ம்பதிப்பதும், சம்பாதித்த பணத்தை காப்பதும், பெருக்குவதும் ஒரு பெரிய விசக்யமே இல்லை.


பணம், சொத்து சேர்ப்பதை தேவையற்றதகவோ, சத்தியமற்றதகவோ சித்தரிக்கும் அனைத்து கண்ணோட்டங்களையும் தூக்கி எறியுங்கள்.

நல்ல வழியில் அதிக பணம் சம்ம்பதிக இயலாது என்ர நினைப்பு இருந்தால் இந்த நிமிடமே மாற்றிக்கொள்ளுங்கள்.

பணம் ஒரு மாபெரும் சக்தி !!!

இந்த உலகத்தில் நாம் உயிர்வாழ, அக்க்ஜிஷனுக்கு அடுத்தபடியாக முக்கியமாகத் தேவைப்படுவது பணம்.

சர்வ வசதிகளும் நிறைந்த இவ் உலகத்தில் நாம் பணம் சம்ம்பதிப்பதும், சம்பாதித்த பணத்தை காப்பதும், பெருக்குவதும் ஒரு பெரிய விசக்யமே இல்லை.

பணம், சொத்து சேர்ப்பதை தேவையற்றதகவோ, சத்தியமற்றதகவோ சித்தரிக்கும் அனைத்து கண்ணோட்டங்களையும் தூக்கி எறியுங்கள்.

நல்ல வழியில் அதிக பணம் சம்ம்பதிக இயலாது என்ர நினைப்பு இருந்தால் இந்த நிமிடமே மாற்றிக்கொள்ளுங்கள்.

பணம் பத்தும் செய்யும்.

பழ மொழி

பழமொழி என்றால் பழமையான மொழி, பழம் போல் இனிக்கும் பொன்மொழி என்று கொள்ளலாம். தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளை உலகத்தோர் உணரும் பொருட்டு சுருங்கக் கூறி விளங்க வைக்கும் விதத்தில் உதிர்த்த வாய் மொழிகள் பிறருக்கு வழிகாட்டியாக விளங்கியதால் அவை பழமொழி, பொன்மொழி என்று அம்மொழிகளின் பொருளை உணர்ந்து அவற்றின் யதார்த்ததை அனுபவித்தவர் கூறினர்.
(1) ஒன்று பட்டால் உண்டு
(2) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
(3) ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
(4) வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
(5) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
(6) அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்
(7) அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(8) அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்
(9) அடியாத மாடு படியாது
(10) குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
(11) தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை
(12) தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
(13) எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
(14) வரவு எட்டணா செலவு பத்தணா
(15) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
(16) ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்
(17) கிட்டாதாயின் வெட்டென மற
(18) ஆறிலும் சாவு நூறிலும் சாவு
(19) சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு
(20) இக்கரைக்கு அக்கரை பச்சை
(21) ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
(22) ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
(23) ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
(24) ஆதாயமில்லாமல் வியாபாரி ஆற்றோடு போகமாட்டான்
(25) யானைக்கும் அடி சறுக்கும்
(26) ஊருடன் ஒட்டி வாழ்
(27) பதறாத காரியம் சிதறாது
(28) கூழானாலும் குளித்துக் குடி
(29) கந்தையானாலும் கசக்கிக் கட்டு
(30) நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை
(31) ஆடையில்லாதவன் அரை மனிதன்
(32) ஆழம் தெரியாமல் காலை விடாதே
(33) ஆடிப் பட்டம் தேடி விதை
(34) ஆட மாட்டாத நடன மாதிற்குக் கூடம் கோணலாம்
(35) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்(36) அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள்(37) விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன்(38) மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே(39) வழுக்கி விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை(40) தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தான் தெரியும்(41) நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்(42) பானை பிடித்தவள் பாக்கியசாலி(43) விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?(44) தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்(45) மனமிருந்தால் மார்க்கமுண்டு(46) ஓருவனுக்கு ஒருத்தி(47) தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன(48) காமாலைக் காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்(49) கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை(50) காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்(51) போகாத ஊருக்கு வழி எது(52) சாண் ஏறினால் முழம் வழுக்கும்(53) தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான்(54) கொட்டினாள் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி(55) ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி(56) தடி எடுத்தவன் தண்டக்காரன்(57) உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன்(58) பக்கம் பார்த்துப் பேசு(59) வெளுத்ததெல்லாம் பாலல்ல(60) மாமியார் உடைத்தால் மண் கலம் மருமகள் உடைத்தால் பொன் கலம்(61) வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ(62) நாய் வாலை நிமிர்த்த முடியாது(63) குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு(64) தனக்கு மிஞ்சித் தான் தருமம்(65) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு(66) ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை(67) வெட்டு ஒன்று துண்டிரண்டு(68) சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி(69) சிறு துளி பெரு வெள்ளம்(70) வருமுன் காப்பதறிவு(71) கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?(72) விளையும் பயிர் முளையிலே தெரியும்(73) முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்(74) மடியில் கனமிருந்தால் வழியில் பயம்(75) தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்(76) பொறுத்தார் பூமியாள்வார் பொங்குவார் காடாள்வார்(77) தருமம் தலை காக்கும்(78) பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்(79) நோயிருக்கும் இடத்தில் தான் வைத்தியனுக்கு வேலை(80) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்(81) கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்(82) பனை மரத்தடியிலமர்ந்து பாலைக் குடித்தாலுள் கள்ளைக் குடித்ததாய்க் கொள்வார்கள்(83) யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்(84) மத்தளத்திற்கு இரு புறமும் இடி(85) கழுதைக்குத் தெரியுமா கற்பூற வாசனை?(86) சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது(87) இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை(88) பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்(89) குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்(90) ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்(91) குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் பட வேண்டும்(92) புத்திமானே பலவான்(93) கற்றுக் கொடுத்த பாடமும் கட்டிக் கொடுத்த சாதமும் நீண்ட நாள் வருவதில்லை(94) தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு(95) தானாடா விட்டாலும் சதையாடும்(96) ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்(97) உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?(98) எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே(99) நல்லவனைப் போலிருப்பான் நடுச் சாமத் துரோகி(100) கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பாது(101) நுணலும் தன் வாயால் கெடும்(102) அவுசாரி என்று யானை மேல் போகலாம், திருடி என்று தெருவில் போக முடியாது(103) தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்(104) வெயிலில் சென்றவனுக்குத் தான் நிழலின் அருமை புரியும்(105) கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்(106) விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்(107) ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே(108) கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே(109) உயிர் காப்பான் தோழன்(110) குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்(111) போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து(112) ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு(113) படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்(114) சிறு துரும்பும் பல் குத்த உதவும்(115) ஏழை என்றால் மோழையும் பாயும்(116) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்(117) உதட்டில் உறவு உள்ளத்தில் பகை(118) ஆடு பகை குட்டி உறவா?(119) இளங்கன்று பயமறியாது(120) பேராசை பெரு நஷ்டம்(121) மின்னுவதெல்லாம் பொன்னல்ல(122) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு(123) அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி(124) வெறுங்கை முழம் போடுமா?(125) குரைக்கிற நாய் கடிக்காது(126) பந்திக்கு முந்து படைக்குப் பிந்து(127) இனம் இனத்தோடு சேரும்(128) புயலுக்குப் பின்னே அமைதி(129) பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்(130) யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே(131) எறும்பு ஊறக் கல்லும் தேயும்(132) தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்(133) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?(134) கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்(135) இரைக்கிற ஊற்றே சுரக்கும் (136) எலி வளையானாலும் தனி வளை(137) நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும்(138) பெண் என்றால் பேயும் இரங்கும்(139) யானைகொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்(140) கெடுவான் கேடு நினைப்பான்(142) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்(143) தோல்வியே வெற்றியின் முதல் படி(144) சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா(145) ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது(146) பழகப் பழகப் பாலும் புளிக்கும்(147) முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?(148) பதறிய காரியம் சிதறும்(149) பசி வந்திடப் பத்தும் பறந்து போம்(150) நண்டு கொழுத்தால் வளையில் தங்காது(151) பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்(152) பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி(153) வீட்டில் எலி வெளியில் புலி(154) உப்பிட்டவரை உள்ளளவும் நினை(155) உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே(156) வாழு, வாழ விடு(157) எறிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்(158) நாம் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது(159) பணமில்லாதவன் பிணம்(160) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை(161) பணம் பத்தும் செய்யும்(162) தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே(163) முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்(164) நெருப்பில்லாமல் புகையாது(165) ஜென்ம புத்தி செருப்பாலடித்தாலும் போகாது(166) பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்(167) தனி மரம் தோப்பாகாது(168) ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்(169) ஏழை சொல் அம்பலம் ஏறாது(170) பூசனிக்காய் போவது தெரியாது, கடுகுக்குக் காதை அறுத்துக் கொள்வான்(171) சித்திரமும் கைப்பழக்கம்(172) வெள்ளம் வருமுன் அணை போடு(173) தன் கையே தனக்குதவி(174) பருவத்தே பயிர் செய்(175) பிள்ளையையுள் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே(176) கொழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது(177) வேலியே பயிரை மேய்ந்தால் விளைவு என்ன?(178) அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்(179) துள்ளுகிற மாடு பொதி சுமக்காது(180) தன்னைப்போல் பிறரை நினை(182) ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது(183) காலமும் கடலலையும் காத்திருக்காது(184) இறந்த காலத்தை என்றும் பெற இயலாது(185) கொல்லன் பட்டறையில் ஊசி விற்கலாமா?(186) இளமையில் கல்

ரியல் எஸ்டேட்.

ஷேர் மார்க்க்ட்டில் முதலீடு செய்வதை விட ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்கிற நம்பிக்கை எல்லோருக்கும் இருப்பதாக அறிகிறோம்.பங்குச் சந்தையில் ஆயிரம் ரூபாய் இருந்தால் கூட ஏதாவது வாங்க முடியும். ஆனால் ரியல் எஸ்டேட் என்று நினைக்கவே சில இலட்சங்கள் ஆகும். இந்தப் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வு என ரியல் எஸ்டேட் மியூச்சுவல் நிதித் திட்டங்கள் அமையும் என எதிர்பார்க்கலாம்.சரியாக நினைவில்லை. இன்றும் கூட இது போன்ற திட்டங்கள் இயங்கி வருகின்றன. குறைந்த பட்ச முதலீடாகப் பல இலட்சங்கள் வேண்டுமென்கிறன விதிமுறைகள் இருக்கின்றன. ஆகவே, பெரும் சீமான்களுக்காக அவை அமைந்திருக்கின்றன.இந்தியப் பத்திரப் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange board of India - SEBI) சமீபத்தில் சிறு முதலீட்டாளர்களும் பங்கு கொள்ளும் வகையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. சராசரி பரஸ்பர நிதித்திட்டங்கள் போலப் பொதுமக்கள் அனைவரும் பங்குபெறும் வகையில் பணம் திரட்ட செபி அனுமத்துள்ளது. மிக முக்கியமான சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது இம்முடிவு.இவ்வாறு வரவிருக்கும் திட்டங்கள் எந்த மாதிரி கட்டமைப்புப் பணீகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் செபி வரையறுக்கிறது. கட்டிடம், கட்டுமானம், தொழிற்பூங்காக்கள் போன்ற பெருமுதலீடு தேவைப்படும் project போன்றவற்றில் நேரடியாக அல்லது அது போன்ற செயலில் ஈடுபடும் நிறுவனங்களில் பங்குகளின் மூலம் மறைமுகமாகவோ இப்பணம் பாய்ச்சப்படலாம்.எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறுகிற open-ended வழிமுறைகள் இவற்றில் இருக்காது. நீண்ட காலத்திற்கு முதல் அடைத்து வைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த ஏற்பாடு. அதே வேளை, அவை பங்குச் சந்தையில் பங்குகளைப் போல விற்க இயலுகிற ETF (Exchange Traded Fund) திட்டங்களாக இருக்குமென எதிர்பார்க்கலாம். நிதி நிர்வாக நிறுவனம் தினந்தோறும் நிகரச் சொத்து மதிப்பைக் கணக்கிட்டுத் தெரிவிகக் வேண்டும் எனவும் செபி வலியுறுத்தியுள்ளது.அளவற்ற உள்கட்டுமானத் தேவை இருக்கிற நமது நாட்டில், அவற்றை பூர்த்தி செய்ய வெளிநாட்டு முதலீடுகளை முழுக்க முழுக்க நம்ப வேண்டிய தேவையை மேற்சொன்ன நடவடிக்கை ஓரளவு தணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

பணம் சம்பாதிக்க...

பணம் வேணுமா ?

காசேதான் கடவுள் !!!

அமெரிக்க டாலர் காகிதங்களில் 'கடவுளை நம்புகிறோம் ' (In God we trust) என்று எழுதியிருக்கிறது. அமெரிக்க உளவு நிறுவனத்தை கிண்டல் செய்வதற்காக மக்கள் சொல்வது 'மற்ற எல்லோரையும் நாங்கள் கண்காணிக்கிறோம் ' (All Others, we monitor) என்பது. இந்த ஜோக் உண்மையாகக்கூடிய காலம் வெகு விரைவில் வந்து கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், மேற்கண்ட 'மற்ற எல்லோரையும் நாங்கள் கண்காணிக்கிறோம் ' என்று எழுதியே டாலர் காகிதங்கள் வந்தால் கூட சரியாகத் தான் இருக்கும்.
Radio-frequency identification tags (RFIDs) என்று சொல்லப்படும் 'வானலை அடையாள குறிகள் ' ஏற்கெனவே பல பாதுகாப்பான இடங்களுக்கு அனுமதி வழங்க அட்டைகளில் கொடுக்கப்படுகின்றன. இவைகள், புத்தக நிலையங்களிலும், விற்பனை செய்யப்படும் பொருள்களை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பயனுள்ள குணம் என்னவென்றால், இவை ஒவ்வொன்றும் ஒரு தனி அடையாளத்தைக் கொண்டவை. இதனால், ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே அடையாளம் காண முடியும். அது மட்டுமல்ல, இவைகளை வெகு தூரத்திலிருந்து கொண்டே அறிந்து கொள்ளலாம். சமீப காலத்தில், இந்த அடையாள அட்டைகளை உருவாக்கும் தொழிற்சாலை அதிபர்கள், இவைகளை வங்கிகளின் பண காகிதங்களில் உபயோகப்படுத்துவதால் கிடைக்கும் லாபத்தை யோசித்து ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வங்கிகளின் பணக்காகிதங்களில் அடையாள குறிகளை போட்டால், சட்டரீதியான பணமா, எவ்வளவு பணம், இந்தப் பணம் எங்கே எங்கே சென்றது ஆகிய அனைத்தையும் அறியலாம்.
இந்த RFID குறிகளில் ஒரு சின்ன மைக்ரோசிப் சில்லு-வும், உள்ளே ஒரு ஆண்டெனாவும் (சின்ன கம்பி) இருக்கும். இவைகளை ஒரு சின்ன பிளாஸ்டிக் பேப்பருக்குள் அழுத்தப்பட்டு உள்ளே இருக்கும். உள்ளே எந்த பாட்டரியும் இருக்காது. இந்த குறியை எந்த மெஷினாவது படிக்க முயன்றால், அந்த ரேடியோ அலைகளினால் இந்த கம்பிக்குள் ஒரு சின்ன அளவு மின்காந்த சக்தி பாய்ந்து
அமெரிக்காவின் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், ஜப்பானின் ஹிடாச்சி, ஜெர்மனியின் இன்ஃபினியன் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள், புதிய வகை RFID குறிகளை உருவாக்கி இருக்கின்றன. இந்த மிகச்சிறிய கருவிகளின் அளவு சுமார் 1 மில்லி மீட்டர்தான். இவைகள் மிக அதிக அளவில், மிகக்குறைந்த செலவில் உருவாக்கவும், இவைகளை எளிமையாக வங்கி பணக்காகிதங்களின் உள்ளே புதைக்கவும் இயலும்.
இந்த வங்கிப் பணக்காகிதங்களை எவ்வளவு தூரத்திலிருந்து படிக்கலாம் என்பது எப்படிப்பட்ட சில்லுகள் இந்த பணக்காகிதங்களின் உள்ளே பொறுத்தப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்தது. சுமார் 10 செமீயிலிருந்து 1 மீட்டர் வரைக்கும் தூரம் இருக்கலாம். ஒரு சில தொழில்நுட்பம் மூலம், சுமார் 30 வங்கி காகிதங்களை ஒரே வினாடியில் படிக்கவும் இயலும். ஆரம்பத்தில் பணக்கட்டுகளை படிக்க முடியாது. ஒவ்வொன்றாக தரப்படும் பணம் எளிதாக படிக்க இயலும்.
இந்தத் தொழில்நுட்பத்துக்கு ஆகும் செலவு ஒரு சில்லுக்கு 10 ரூபாய் (30 அமெரிக்க காசுகள்) ஆகலாம். எப்படிப்பட்ட பாதுகாப்பு வேண்டும் என்பதைப் பொறுத்து விலையும் மாறும். இன்னும் சில 30 மாதங்களுக்குள் சில தொழில்நுட்பப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்று இன்ஃபினியன் நிறுவனம் கூறுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் விமர்சகர்கள், நீண்டகால தாமதத்தின் காரணமாக, உலகளாவிய பணப்பாதுகாப்பு தரங்கள் பற்றி ஒரு ஒப்பந்தத்துக்கு வருவது பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
ஐரோப்பாவின் யூரோ பணம் இவ்வாறு குறியிடப்பட்டு வரும் சாத்தியம் இருக்கிறது. ஹிடாச்சி ஏற்கெனவே சில ஐரோப்பிய வங்கிகளுடன் இது சம்பந்தமாக பேசிவருவதாக அறிவித்து உள்ளது.
இப்படிப்பட்ட குறிகள், போலி பணம் தயார் பண்ணுபவர்களின் வாழ்க்கையை மிகவும் சோதனைப்படுத்திவிடும். ஏற்கெனவே, போலிப்பணத்துக்கு எதிரான வழிமுறைகள் மிகவும் உறுதியாக இருந்தாலும், இப்படிப்பட்ட ஆர்எஃப்ஐடிகள் மிகவும் உறுதியாகவும் ஆகிவிடும்.
இப்படிப்பட்ட குறியிடப்பட்ட பணக்காகிதங்கள், நேரடியாக ஒரு வங்கியின் உள்ளே இருக்கும் பணத்தை வெகுவிரைவில் கணக்கிட உதவும். எந்தப்பணம் யார் வாங்கிக்கொண்டு சென்றார்கள் என்பதும் மிகவும் நேரடியாக வங்கிகளால் செய்தி சேமிக்க உதவும். அதே போல, திருடப்பட்ட பணத்தை இப்போது யார் உபயோகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறியவும் இது உதவும். எவ்வாறு பணம் நாட்டில் உலவுகிறது, எந்தப்பணம் புழக்கத்திலேயே வரவில்லை, எந்தப் பணம் மிக அதிகமாக உலவுகிறது ஆகிய அனைத்தும் இதன் மூலம் அறியலாம்.
இதற்கு இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன. வெளிப்படையாக இல்லாத அடித்தள பொருளாதாரத்தில் எப்படி பணம் புழங்குகிறது, கடைசியில் எங்கு சென்று சேர்கிறது என்பதையும் இதன் மூலம் அறியலாம். ஆள்களைக் கடத்தி மீட்க பணம் கேட்கும் கடத்தல் காரர்களும், போதை மருந்து விற்கும் குற்றவாளிகளும் இந்தப் பணத்தின் மூலம் எளிதாக கண்டுபிடிக்கப்படலாம்.
இந்த தொழில்நுட்பம் மிகவும் தீவிரமாக தனி மனிதனின் அந்தரங்கத்தைப் பாதிக்கிறது என்பது உண்மைதான். ஒரு புறம், போதைப்பொருள்போன்ற தவறான பொருள்களில் வியாபாரம் செய்பவர்களும், விபச்சாரம் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களும், தங்களுடைய அந்தரங்கத்தையும், அனாமதேயத்தையும் இழக்கிறார்கள். மறுபுறம், அப்பாவியானவர்களும், இந்தப்பணம் இவர்கள் வழியே சென்றது என்ற ஒரே காரணத்துக்காக குற்றவாளியாகும் சூழ்நிலையும் இருக்கிறது.
இருப்பினும், பயங்கரவாதம், தீவிரவாதம், அமைப்புரீதியான குற்றங்கள் பெருகிய இந்த நாட்களில், சில பல உபரி விளைவுகள் இருந்தாலும் அவற்றைப் பொறுத்துக்கொண்டு, வலிமையாக பணத்தை தடயப்பொருளாக ஆக்கும் இந்த உத்திகள் வலிமைபெறும் என்றே தோன்றுகிறது. இந்த குறிகளின் விலைகள் இன்றைய தேதிக்கு மிக அதிகம் என்பது உண்மையானாலும், அதிகமதிப்பு கொண்ட (100 யூரோ, 500 யூரோ போன்றவைகளில்) ஆரம்பிக்கப்பட்டு, இதன் மூலம் விலைகுறைவு பெற்றதும் குறைந்த மதிப்பு காகிதங்களிலும் உபயோகிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் பக்க விளைவாக, இந்த தேசங்கள் இந்தியா போன்ற தேசங்களிலும் இந்த குறிகள் உள்ள பணத்தை புழக்கத்துக்கு அனுப்ப வற்புறுத்தும், ஆதரிக்கும், அல்லது மானியம் அளிக்கும் நிலைமையும் வரலாம். அதன் பின்னர், குற்றவாளிகளைப் பொறுத்த மட்டில், பணம் பேசாது, பதிலாக காட்டிக்கொடுக்கும்.


எகானமிஸ்ட் இதழுக்கு ....

பங்கு சந்தை

சென்செக்ஸ் என்றால் என்ன?
இன்று சென்செக்ஸ்(532) மற்றும் நிஃப்டி(174) தட தடவென பல புள்ளிகளை இழந்துள்ளது. இன்று பல புள்ளிகளை சந்தை இழக்கக்கூடும் என காலையிலேயே பங்குவணிகம் குறிப்பிட்டிருந்தது அவரது அனுபவத்தைக் காட்டுகிறது.சென்செக்ஸ், சென்செக்ஸ் என நிறையக் கேட்டிருக்கிறோம் அது என்ன எனபதை இங்கு பார்ப்போம்அதுக்கு முன்னாடி இந்தியாவின் பங்கு சந்தை வரலாற்றையும் கொஞ்சம் பார்ப்போம்.
இந்தியாவின் பங்கு சந்தை வரலாறு 1875-லிருந்து ஆரம்பிக்கிறது. அப்போது 318 பேர் தலைக்கு ரூ. 1/- கொடுத்து இப்போது பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச் என அழைக்கப்படுகிற BSE-யில் உறுப்பினரார்கள்! (இப்போ இவங்க வம்சா வழியெல்லாம் எங்கே இருக்குன்னு தெரியல :) )
1875-லேயே தொடங்கினாலும் ஒன்னும் பெருசா சொல்லிக்கிற மாதிரியில்ல.
1986 வரைக்கும் பங்கு சந்தையை மதிப்பிடுவதற்கு எந்த குறியீடும் இல்லை.
1986 -லே தான் BSE சென்செக்ஸ் என்ற பங்கு சந்தைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியது.
மார்கெட்டில் இருக்கிற 30 பெரிய கம்பெனிகளின் பங்கு விலைகளைப் பொருத்து சென்செக்ஸ் புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன! பல கம்பெனிகள் பங்கு சந்தையில் வெளியிடப்பட்டாலும் எல்லாமே குறியீட்டெண்களைக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
30 பெரிய கம்பெனிகளின் பங்குகளைப் பொருத்தே இது அமைவதால் இது BSE 30 குறியீடு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கம்பெனிகளின் பங்கு விலைகளில் மாற்றம் வரும் போது சென்செக்ஸிலும் ஏற்ற இறக்கங்கள் வரும்.
BSE 30-இல் 30 பங்குகள் 13 விதமான துறைகளிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவை கட்டுமானம், வங்கி, ஆட்டோ மொபைல், டெக்னாலஜி போன்றவைகளாகும். இதைத் தவிர BSE 50, BSE 100 போன்ற குறியீடுகளும் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டன. BSE 50, 100 என்ற எண்கள், எத்தனைக் கம்பெனிகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன எனபதைக் குறிக்கிறது.இதே போல் துறைவாரியான குறியீடுகளும் உள்ளன. உலோகம், வங்கி குறியீடு என.
BSE என்பது Bombay Stock Exchange-யைக் குறிப்பது போல நிஃப்டி என்பது தேசிய பங்கு சந்தையைக் குறிக்கிறது.
இதன் தலைமையகம் டெல்லியாகும். இதில் 50 கம்பெனிகள் 24 விதமான துறைகளிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.நிஃப்டியும் நிஃப்டி 500, ஜுனியர் என பல குறியீட்டெண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.BSE-க்கு சென்செக்ஸ் எனவும் NSE-க்கு நிஃப்டி என்பதும் பங்கு குறியீட்டெண்ணாகும். இதைத் தவிர கல்கத்தா மற்றும் மெட்ராஸ் பங்கு சந்தைகளும் உள்ளன.சரி, இது வரை குறியீட்டெண்களைப் பற்றி தெரிந்து கொண்டுவிட்டோம்... எப்படி இந்த 30 நிறுவணங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, எதை வைத்து குறியீடு கணக்கிடப்படுகிறது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
தென்றல் அடிப்படைக் கருத்துகளையும் பங்குவணிகம் டெக்னிக்கலாகவும் எழுதுவதால் மத்தத இங்க சொல்லலாம்னு இருக்கேன்.முதல ஷேர் மார்கெட்ல எதுக்கு ஈடுபடனுங்கறதுக்கான என்னோட கருத்துக்கள்... பணம் பண்ணுவதற்கு தான். ஆனால் அதுக்கு இது எப்படி சரியான வழி...
1. ரொம்ப பணம் தேவையில்லை... முதலீடா ஒரு வீடோ, நிலமோ வாங்குவதற்கு நமக்கு நிறையப் பணம் தேவைப்படும்... ஆனா இதுக்கு அவ்வளவெல்லாம் தேவையில்லை.
2. பங்கு வர்த்தகப் பரிவர்த்தனைக்கு அதிக நேரம் ஒதுக்க தேவையில்லை.
ஒரு தொலைபேசியோ, கணிணியும் இன்டர்நெட்டுமோ இருந்தால் போதும்
3. பங்குகளை எளிதில் பணமாக்கும் வசதி (Liquidity)(வாங்குவதற்கும் ஆள் வேண்டும்! :) )
4. இன்னொரு முக்கிய காரணம் - தேசப்பற்று. உண்மைதாங்க, நம்ப நாட்டு முதலீட்டாளர்கள் அதிகமாகிறப்ப சந்தையின் ஸ்திரத்தன்மையும் கூட வாய்ப்பிருக்கிறது.அடுத்தடுத்தப் பதிவுகளில இதெல்லாம் எப்படிங்கறத பார்க்கலாம்!
ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஷேர், ம்யூட்சுவல் ஃபண்ட் எல்லாம் ஏதோ அன்னிய மொழி வார்த்தையாத் தான் இருந்துச்சு. அப்ப தான் என் cousin ஒருத்தர் ம்யூட்சுவல் ஃபண்ட் பத்தி ரொம்ப பெருமையா சொல்லிக்கிட்டிருந்தார். சொல்லிட்டு நீ ஏதாவது போட்டு வச்சிருக்கியான்னார். நமக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லிங்க. ஒரு ரூபான்னாலும் அத கோழி அடை காக்கிற மாதிரி பேங்கில போட்டு வச்சு தான் பழக்கம் நமக்கு இது எல்லாம் வேணாம்னு சொன்னேன்.

தெரியலைன்னா சொல்றதையாவது கேட்டிருந்திருக்கலாம் அத ஒரு சூதாட்ட ரேஞ்சுக்கு சொல்ல பார்ட்டி ரொம்ப கடுப்பாயி என்னை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு நாளைக்கு ஒருத்தர் கிட்ட கூட்டிட்டு போறேன் அவருக்கிட்ட பேசுன்னார்...

என்னடா இது அக்கடானு ஞாயித்துக் கிழமை ரிமோட் கன்ட்ரோல் அழுவுற வரைக்கும் டிவிய மாத்து மாத்துனு மாத்திக்கிட்டு பொழுத ஓட்டலாம்னு பாத்தா இவரு இப்படி சொல்லிட்டு போறாரேனு என்னோட வாய நொந்துக்கிட்டு டி.வி. முன்னாடி உக்காந்தா டி.வி.ல அப்பதான் ஒரு டிஸ்கியோட விளம்பரம் ஓடிச்சு! என்னன்னு பாத்தா அட ம்யூட்சுவல் ஃபண்ட் விளம்பரம் தான். என்னடா இங்கியுமானு நினைச்சிக்கிட்டு கூகிளாண்டவரை திறந்து "ம்யூட்சுவல் ஃபண்ட்"னு அடிச்சா ஏகப்பட்ட லிங்க்கு வருது... ஆகா இது தெரியாமாப் போச்சே!

இப்படிக் கொஞ்சமா தேட ஆரம்பிக்க ஏகப்பட்ட புது வார்த்தைக்ள் தெரிய வந்துச்சு! அப்புறம் அதிலேயே ரொம்ப இன்ட்ரெஸ்டாயி பங்கு சந்தை பிதா மகன் வாரன் பஃப்பட் ரேஞ்சுக்கு என்னய கற்பனைப் பண்ணிக்கிட்டு ம்யூட்சுவல் ஃபண்ட் பங்கு சந்தைனு இறங்கி ஏதோ பண்ணிக்கிட்டு இருக்கேன். அதனால என்னோட கத்துக்குட்டி அனுபவங்கள சொல்லாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்தேன்... நம்முடைய வலைப்பதிவர்கள் இதெல்லாம் பத்தி எழுத ஆரம்ப்ச்சது வேற உந்துதலா இருந்துச்சு. வரும் நாட்கள்ல எனது அனுபவங்களைப் பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன்!!!
இது முழுக்க முழுக்க என் பார்வையும் அனுபவங்களும் மட்டுமே! இதைப் பின்பற்றி யாராவது பங்கு சந்தையிலோ, ம்யூட்சுவல் ஃபண்டிலோ இறங்கி இலாபமோ முக்கியமாக நட்டமோ அடைந்தால் இந்த வலைப்பதிவர் பொறுப்பல்ல! (அப்பா டிஸ்கி போட்டாச்சு)!