skip to main |
skip to sidebar
ரியல் எஸ்டேட்.
ஷேர் மார்க்க்ட்டில் முதலீடு செய்வதை விட ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்கிற நம்பிக்கை எல்லோருக்கும் இருப்பதாக அறிகிறோம்.பங்குச் சந்தையில் ஆயிரம் ரூபாய் இருந்தால் கூட ஏதாவது வாங்க முடியும். ஆனால் ரியல் எஸ்டேட் என்று நினைக்கவே சில இலட்சங்கள் ஆகும். இந்தப் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வு என ரியல் எஸ்டேட் மியூச்சுவல் நிதித் திட்டங்கள் அமையும் என எதிர்பார்க்கலாம்.சரியாக நினைவில்லை. இன்றும் கூட இது போன்ற திட்டங்கள் இயங்கி வருகின்றன. குறைந்த பட்ச முதலீடாகப் பல இலட்சங்கள் வேண்டுமென்கிறன விதிமுறைகள் இருக்கின்றன. ஆகவே, பெரும் சீமான்களுக்காக அவை அமைந்திருக்கின்றன.இந்தியப் பத்திரப் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange board of India - SEBI) சமீபத்தில் சிறு முதலீட்டாளர்களும் பங்கு கொள்ளும் வகையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. சராசரி பரஸ்பர நிதித்திட்டங்கள் போலப் பொதுமக்கள் அனைவரும் பங்குபெறும் வகையில் பணம் திரட்ட செபி அனுமத்துள்ளது. மிக முக்கியமான சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது இம்முடிவு.இவ்வாறு வரவிருக்கும் திட்டங்கள் எந்த மாதிரி கட்டமைப்புப் பணீகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் செபி வரையறுக்கிறது. கட்டிடம், கட்டுமானம், தொழிற்பூங்காக்கள் போன்ற பெருமுதலீடு தேவைப்படும் project போன்றவற்றில் நேரடியாக அல்லது அது போன்ற செயலில் ஈடுபடும் நிறுவனங்களில் பங்குகளின் மூலம் மறைமுகமாகவோ இப்பணம் பாய்ச்சப்படலாம்.எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறுகிற open-ended வழிமுறைகள் இவற்றில் இருக்காது. நீண்ட காலத்திற்கு முதல் அடைத்து வைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த ஏற்பாடு. அதே வேளை, அவை பங்குச் சந்தையில் பங்குகளைப் போல விற்க இயலுகிற ETF (Exchange Traded Fund) திட்டங்களாக இருக்குமென எதிர்பார்க்கலாம். நிதி நிர்வாக நிறுவனம் தினந்தோறும் நிகரச் சொத்து மதிப்பைக் கணக்கிட்டுத் தெரிவிகக் வேண்டும் எனவும் செபி வலியுறுத்தியுள்ளது.அளவற்ற உள்கட்டுமானத் தேவை இருக்கிற நமது நாட்டில், அவற்றை பூர்த்தி செய்ய வெளிநாட்டு முதலீடுகளை முழுக்க முழுக்க நம்ப வேண்டிய தேவையை மேற்சொன்ன நடவடிக்கை ஓரளவு தணிக்கும் என எதிர்பார்க்கலாம்.